Saturday, December 14, 2013

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டியது நிஜமானது - ஜோன் செனவரெத்தின!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி இப் பிரச்சனையை எப்படியாவது தீர்த்துவைக்கும்படி தனக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார் எனவும் கல்முனை தமிழ் பிரதேச செயலதரமுயர்த்தப்பட வேண்டியது நிஜமானது எனவும் ஜனாதிபதியின் ஆதரவுடன் தரமுயர்த்தப்படும் என பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவரத்ன தமிழ் தரப்பிடம் வாக்குறுதியளித்துள்ளதாக அம்பாரை மாவட்ட தமிழர் அபிவிருத்தி வாழ் உரிமை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பாக கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலகம் தரமுயர்தப்படும் என அமைச்சர் வாக்குறுதியளித்து, தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார் என அம்பாரை மாவட்ட தமிழர் அபிவிருத்தி வாழ் உரிமை ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய இப்பிரதேச கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பான கூட்டத்தில் அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட உள்ள பிரதேச செயலக எல்லைகள் தொடர்பாக குறிப்பிட்ட வேளையில் முஸ்லீம் பிரதிநிதிகள் பாரிய எதிர்ப்பை காட்டினார்கள்.

இதன்போது பிரதி அமைச்சர் சரத் வீரசேகர கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எந்தவித அதிகாரமும் அற்ற ஒரு பிரதேச செயலாளருடனும் முழுமையான கட்டிடவசதிகளுடனும் இப் பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் உடனடியாக தரமுயர்த்தப்படுவதே தமிழர்களுக்கு இன்றைய தேவை என்பதை சுட்டிக்காட்டி 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 23 பிரதேச செயலகங்களில் இப் பிரதேச செயலகம் மட்டும் தரமுயர்த்தப்படவில்லை.

இதற்கு பிற்பாடு உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் முழு அதிகாரத்துடன் கல்முனை மாநகரசபைக்கு உட்பட்டது. எனவே இப்பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதில் எந்தவித தவறும் இல்லை எனவும் கல்முனை வாழ்தமிழ் மக்களின் அபிலாசை இதுவே என வாதிட்டார்.

இந்நிலையில் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவரெத்தின இதற்கு பதிலளித்து பேசியபோது, இப் பிரதேச செயலகம் தரமுயர்தப்பட வேண்டியது உண்மையிலே நிஜமானது எனவும் தனது முடிவினை ஜனாதிபதியுடம் தெரிவித்து அவரின் ஆதரவுடன் தரமுயர்த்தப்படும் என தமிழ் தரப்பிடம் வாக்குறுதியளித்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com