கடமை நேரத்தில் வைத்தியசாலையில் இருக்காத இளவாலை பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு எதிராக பொது நபர் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிரா ந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்ப வம் நேற்று இடம்பெற்றுள்ளது. முறைப்பாடு செய்தவரின் 4 வயது மகனிற்கு விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பலத்த வலியால் துடித்த பிள்ளையைத் தூக்கிக் கொண்டு 8.30 இளவாலை வைத்தியசாலைக்கு ஓடியுள்ளார்.
ஆனால் 9.45 மணி வரை வைத்தியர் வரவில்லை. அங்கிருந்த தாதியர்களிடம் அவர் வினவியபோது வைத்தியர் 10 மணிக்கு பிறகு தான் வருவார் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து பண்டதரிப்பிற்கு சென்றுள்ளார். அங் கும் வைத்தியர் சுகயீன விடுமுறையில் இருந்துள்ளார். இதனால் பின்னர் பதறி யடித்து சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு பிள்ளையைக் கொண்டு சென்று சிகிச்சையளித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் கடமை நேரத்தில் வைத்தியசாலையில் இருக்காத வைத்தியருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
மனித உரிமைகளை மதிக்காக ஆணைக்குழுவென்றால் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுதான். இவர்களிடம் நாளொன்றுக்கு எத்தனை முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன அவற்றில் எத்தனைக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதுதான் கேள்வி. மனித உரிமை ஆணைக்குழுவிலுள்ளவர்களுக்கு மக்கள் முறைப்பாடு செய்தால் நல்ல பிரியம்.
ReplyDeleteஏனென்றால் அந்த முறைப்பாட்டை காட்டி சம்பந்தப்பட்டவரி்டம் வாங்கவேண்டியதை வாங்கிகொள்வர்.
வடகிழக்கிலுள்ள அதிகாரிகள் கொஞ்சப்பேரை நடுத்தெருவில் நிப்பாட்டி நாய்க்கு எறிவது போல் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் அப்பதான் மற்ற நாய்கள் திருந்தும்.