நைரோபி ஐ.நா. அலுவலகத்தில் இறப்பர் மரக்கன்று நட்டினார் ஜனாதிபதி
கென்யாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நைரோபியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு விஜயம் செய்ததுடன் ஐ.நா. அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாலே வேக் செவ்டே, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் அசிம் ஸ்டெய்னர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் பார்வைக்கு வைப்பதற்காக கண்டி பெரஹர வரையப்பட்ட ஓவியம் ஒன்றை இலங்கையின் சார்பில் ஜனாதிபதி பரிசளித்ததுடன் தமது விஜயத்தின் நினைவாக அலுவலக வளாகத்தில் ஆபிரிக்க இறப்பர் மரக்கன்று ஒன்றையும் நட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment