இந்து கோயில்கள் தொடர்பில் பொதுபலசேனவின் அறைகூவலை வரவேற்கின்றது சர்வதேச இந்த மத பீடம்!
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், தம்புள்ளை, இரத்தினபுரி போன்ற இடங்களில் இந்து கோயில்கள் மீதான அண்மைக் கால தாக்குதல்கள் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என சர்வதேச இந்த மத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.
இந்து கடவுள்களும் எமது கடவுள்களே. எனவே இந்துக் கோயில்கள் மீது வன்முறைகளைப் பிரயோகிப்போர் உடனடியாகக் கைது செய்து நீதிக்கு முன் நிறுத்த வேண்டும். அத்துடன் இந்து பௌத்த மதங்களுக்கிடையிலான பிரிவினையை வளர்க்க தாம் ஒரு போதும் அனுமதியளிக்கப் போவதில்லை எனவும் இந்து மத குருமார்கள் கோயில்கள் பாதிக்கப்படும் போது தைரியத்துடன் செயற்பட வேண்டும் என் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள இந்த அறைகூவலை இந்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றார்கள் என சர்வதேச இந்த மத பீடத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், தம்புள்ளை, இரத்தினபுரி போன்ற இடங்களில் இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டு உடைமைகள் திருடப்படுகின்றன. இதற்குக் காரணமானவர்களை பொலிஸார் விரைந்து செயற்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலபொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் பொலிஸாரையும் வேண்டியுள்ளார்கள்.
இந்த நாட்டில் பௌத்த, இந்து மக்கள் நீண்ட கால ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் வாழ்ந்து வருகிறார்கள். பிரிவினைவாதத்தை வளர்க்க நாம் அனுமதிக்கப் போவதில்லை. கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் கருத்து இந்து மக்களால் பெரிதும் வரவேற்கப்படுவதாகவும் பிரம்மஸ்ரீ ராமச்சந்திரக் குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுபல சேனா பௌத்த, இந்து உறவினை மேம்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் கூறினார்.
0 comments :
Post a Comment