த.தே.கூ உறுப்பினர்கள் தங்கள் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க முனைகையில் தோள் தொடுத்தது ஈபிடிபி.
த.தே.கூ உறுப்பினர்கள் உள்ளே நுழைவதை ஊர் கூடித்தடுத்தது. சிவாஜி பல்டி
400 வாக்கு பெற்ற குல நாயே நீ VVT க்கு தவிசாளரா?
வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ளது. இதன் தலைவராக ஆனந்தராசா உள்ளார். ஆனந்தராசாவின் கதிரையை கைப்பற்றுவதற்காக பன்நெடுங்காலங்களாக உள்வீட்டுப்போர் இடம்பெற்று வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையை கைப்பற்றியபோது அதிகூடிய விருப்பு வாக்குகளை ஆனந்தராசா பெற்றிருந்தார். அதனடிப்படையில் அவருக்கு சபைத்தலைவர் பதவி வழங்கப்படவேண்டிய நிர்ப்பதந்தம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்தது. அதிகூடிய வாக்குகளை மக்கள் ஆனந்தராசாவிற்கு வழங்கியிருந்தாலும் எனக்கே தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என அடம்பிடித்து நின்ற சிவாஜிலிங்கம் ஆனந்தராசாவின் தொடர் முயற்சிகளுக்கு முட்டக்கட்டையாக நின்றுவருகின்றார்.
இதனடிப்படையில் ஆனந்தராசாவினால் சமர்பிக்கப்பட்ட 2014ம் ஆண்டுக்கான சபையின் முதலாவது வரவு செலவுத்திட்டம் கட்சியின் சக உறுப்பினர்களால் சிவாஜிலிங்கம் - குலநாயகம் கூட்டுத்தலைமையின் கீழ் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது வரவு செலவுத்திட்டம் ஈபிடிபி எனப்படுகின்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு வல்வெட்டித்துறை மக்கள் பூரண ஆதரவளித்துள்ளனர். இன்றைய வரவுசெலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு குலநாயகம் தலைமையிலான குழுவொன்று திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்த ஊர் மக்கள் முதலில் இக்குழுவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டு வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதன் ஊடாக மக்கள் எதிர் நோக்கவேண்டிய இடர்களை கருத்தில் கொள்ளுமாறும் பதவி போட்டிகளை உதறி எறியுமாறும் வேண்டியுள்ளனர். சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும்போது பிரதேச அபிவிருத்தி தடைப்படுவதனைத்தவிர எந்த லாபமும் ஏற்படப்போவதில்லை என்பதையும் விளக்கியுள்ளனர். ஆனால் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்கவிரும்பாத குலநாயகம்-சிவாஜிலங்கம் தலைமையிலானோர் சபையின் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பது என்ற முடிவில் விட்டுக்கொடுப்புக்கு இணங்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சபை கூடி வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் ஆரம்பமானபோது மாநகர சபையினை மக்கள் முற்றுகையிட்டதுடன் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவிருந்த உறுப்பினர்கள் உள்நுழைவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். சுமார் நான்கு மணித்தியாலயங்கள் சபையினுள் வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கோஷங்களுடன் கூட்டமைப்பின் ஆனந்தராசாவிற்கு எதிரான உறுப்பினர்களை விரட்டியடித்துள்ளனர்.
மக்கள் தம்மை சபையினுள் நுழைய அனுமதிக்கின்றார்கள் இல்லை என சிவாஜிலிங்கம் தலைமையிலானோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து மக்களை கலைத்து தங்களை உள்ளே நுழைய வழிவிடுமாறு பொலிஸாரை கேட்டுள்ளனர்.
பொலிஸார் அங்கு சென்று உறுப்பினர்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டபோது, நாங்கள் தான் இவர்களை இச்சபைக்கு அனுப்பினோம் எங்களுக்கு இவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுப்பதற்கு பூரண ஜனநாயக உரிமை உண்டு என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் இரு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நகர சபைத்தலைவர் ஆனந்தராசாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது.
சிஐபி 1 222/160 எனும் பதிவு இலக்கத்தில் இன்று காலை 10:35 மணிக்கு எஸ்.எஸ்.குலநாயகம் மேற்படி முறைப்பாட்டினை செய்துள்ளபோதும் இதன் பின்னணியில் சிவாஜிலிங்கம் உள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்படுகின்றபோது சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தாகவும் அறியக்கிடைக்கின்றது.
மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள சிவாஜிலிங்கம் நகர சபை விடயத்தில் தொடர்ந்து குறுக்கிடுவது தொடர்பில் அவரை தொடர்பு கொண்டபோது, தான் பொலிஸ் நிலையத்திற்கோ அன்றில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கோ செல்லவில்லை என மறுத்துரைத்ததுடன் தொலைபேசி அழைப்பினை தொடர்பு கொண்டார்.
அவ்வாறாயின் இப்படங்களில் உள்ளது யார் என்ற கேள்வியை இலங்கைநெட் தொடுக்கின்றது.
3 comments :
ஒரு சில சுயநல சொறி நாயிகளால் தந்தை செல்வா வழிவந்த தமிழரசு கட்சி மட்டுமல்ல தமிழினத்தின் மானம், மரியாதையே நாறுகிறது. சம்பந்தன் ஐயா மற்றும் விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் முதலில் எம்மினதிக்குள் இருக்கும் துரோகிகளை துரத்தி விட வேண்டும். இல்லையேல் எமக்கு விமோசம் கிடைக்காமல் மேலும் சனியன் பிடித்த மாதிரி போய்விடும். ஈழத் தமிழினம்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கள்ளர் காடையர்களை அவர்களின் முகத்தில் வைத்து கண்டு கொள்ளாலாம். எனவே கடைசி படத்தை பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கள்ளர் காடையர்களை அவர்களின் முகத்தில் வைத்து கண்டு கொள்ளாலாம். எனவே கடைசி படத்தை பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.
Post a Comment