Tuesday, December 10, 2013

விசமிகளின் திட்டத்தை முறியடித்த மாணவி! தம்புத்தேகம பிரதேசத்தில் சம்பவம்

கல்வியின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் அகிலத்தில் மிகவும் அரிது கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என் றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம் கால மாய்ச் ‎சொல்லப்பட்டு வருகின்றது ஆனால். இன்று ஆரம்ப மாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவரை பரீட்சைக்குத் தோற் றவிடாது தடுக்கும் வகையில் அம்மாணவியின் வீட்டை தீயிட்டுக் கொழுத்திய சம்பவமொன்று தம்புத்தேகம பிர தேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை உபகரணங்கள், சீருடை, பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் போன்றன தீக்கிரையாகிய நிலையிலும் அம்மாணவி தனது பாடசாலை அதிபரின் உதவியுடன் இன்றைய பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

தம்புத்தேகம மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஜயமாலி நிஸ்ஸங்க (வயது 17) என்ற மாணவியின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அம்மாணவி தோற்ற வுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் முகமாக அவரது எதிரியொருவரினால் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளி லிருந்து தெரியவந்துள்ளது. குறித்த மாணவியின் அறை முற்றாக தீக்கிரையா கியுள்ள நிலையில் அதிலிருந்த பாடசாலை உபகரணங்கள், சீருடை, பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் போன்றன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

பாடசாலை சீருடை இன்மையால் அம்மாணவி சிவில் உடையிலேயே பரீட்சை க்குத் தோற்றியுள்ளார். அம்மாணவியின் புகைப்படமொன்றை பாடசாலை அதிபர் அத்தாட்சிப்படுத்திக் கொடுத்த நிலையில் அவர் எவ்வித பிரச்சினையும் இன்றி பரீட்சையை எழுதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comments :

Anonymous ,  December 10, 2013 at 3:32 PM  

Such criminals need term hard labour
without any mercy.The girl student may have the psychological sufferings.She is to be considered as an exceptional case by the department of examination,as her house was burnt out,her tutorials,books etc etc.What a sorrowful things are happening.The values of the religions are melting away

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com