Tuesday, December 3, 2013

புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்புகளை பேணியதில்லை: அரசாங்கமே நெருக்கமான தொடர்புகளை பேணுகிறது என சம்மந்தன் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்புகளைப் பேணியதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பாராளுமன்றில் உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதில்லை. நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை எட்டும் நோக்கில் புலிகளுடன் இணைந்து செயற்பட விரும்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு முதலலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் போன்ற முன்னாள் புலி உறுப்பினர்களுடன் அரசாங்கம் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கமே இவ்வாறு புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற காலத்திலும் அதன் பின்னரும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.


படையினரில் நல்லவர்களும் இருக்கின்றனர் எனவும் சில கெட்டவர்களும் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமிழ் மக்கள் தற்போது கூட்டமைப்பு தொடர்பாகவும் தம்மை ஏமாற்றுவது தொடர்பாகவும் அறிந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment