Tuesday, December 17, 2013

ஹெல உறுமயவை அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் - விக்கிரமபாகு

ஜாதிக ஹெல உறுமய ஒரு பைத்தியக்கார கும்பம் எனவும், இந்த பைத்தியக்கார கும்பலை உடனடியாக அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் எனவும், பிரதமர் டி.எம். ஐயரட்னவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கோருவதற்கு இவர்கள் யார் என இலங்கை நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் பிரதமர் மிகவும் நல்ல ஒரு மனிதர் எனவும், அவரும் நானும் ஒரே ஊரை சேர்ந்தவர்களெனவும், அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும் அவரை பதவியி லிருந்து விலக்க ஜாதிக ஹெல உறுமய யார் எனவும், தற்போது அரசின் பங்காளி கட்சியாக ஜாதிக ஹெல உறுமய திகழ்ந்த போதிலும் குறித்த கட்சியை எவரும் கண்டுகொள்வதில்லை. ஜாதிக ஹெல உறுமயவை அரசிலிருந்து விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே ஜாதிக ஹெல உறுமய மனநோயி லிருந்து விடுபட வேண்டும் என தெரிவித்துள்ளர்.

பிரதமர் ஜயரட்ணவை பதவியிலிருந்து உடனடியாக விலக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய பொதுபல சேன கோரிவருவதுடன் ஜாதிக ஹெல உறுமய இது தொடர்பான கடிதமொன்றை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com