நான் சொல்வது பொய்யாயின் என்னை அடியுங்கள்! - ரஞ்சன் ராமநாயக்க
தான் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட கூற்று பொய்யாயின் தன்னை நடுவீதியில் வைத்து அடிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.
பாராளுமன்ற விவாதங்களை நேரடியாக ஒலி – ஒளிபரப்புச் செய்வதை நிறுத்தமாறு பாராளுமன்றத்திற்கு வந்துள்ள வேண்டுகோள்கள் பற்றிய உரையாடும்போதே பா.உ. இவ்வாறு தெரிவித்தார்.
“இந்த நேரடி ஒலி ஒளிபரப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இலஞ்ச ஊழல்களில் ஈடுபடுவோரே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என நான் கருதுகின்றேன். அவர்கள் அவற்றைத் திருட்டுத்தனமாகச் செய்ய முடியும். நாங்கள் இவற்றை முழுநாட்டுக்கும் தெளிவுபடுத்துவது தவறு. நான் இந்த வாத விவாதத்தில் சொல்பவை பொய்யாக இருந்தால் பொதுமக்கள் நடுவீதியில் என்னைப் பிடித்துத் தாக்கலாம். பாராளுமன்றத்தில் நடைபெறுவதை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பொதுமக்களுக்கு உரிமை இருக்கின்றது என நான் சொல்கிறேன். இது எங்கள் நாட்டுக்கு கண்கட்டு வித்தையாக இருக்கலாம். ஆனால், இத பிறநாடுகளுக்கு சாமான்ய செயல்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment