போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் இருப்பதாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து தொடர்பில் ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் இன்று விசேட உரையொன்றை ஆற்றியிருக்கிறார்.
குறித்த போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரென்பதை பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சபைக்குத் தெரிவிக்க வேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெயர்களை அவர் வெளிப்படுத்த தவறுமிடத்து, மங்கள சமரவீரவைக் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அண்மைக் காலங்களில் போதைப்பொருள் மற்றும் எத்தனோல் தொடர்பில் சமூகத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வந்தது
அண்மையில் சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் தொகுதியை விடுவிக்குமாறு, கடிதமொன்றை அனுப்பிய பிரதமரின் செயலாளருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதுதவிரவும், எத்தனோலை இறக்குமதி செய்ததாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்ணாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பர்ணாண்டோ ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment