வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் கட்டாய கருத்தடையை மூடிமறைக்க சதி! சித்திரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில், மாலையாள்புரம், மருதங்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை இடம்பெற்றதாக செய்திகள் வெளியா கியிருந்த நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள குழு ஒன்றினை நியமித்து தமது விசாரணை அறிக்கையை அண்மையில் வெளியிட்டி ருந்தார்.
அதில் குறித்த பகுதிகளில் கட்டாய கருத்தடை இடம்பெறவில்லை எனவும் அவர்களின் விருப்பப்படியே கருத்தடை இடம்பெற்றதாகவும் தெரிவித்திருந்தார். கருத்தடை தொடர்பாக அவர்கள் சிந்திப்பதற்கு கால அவகாசம் வழங்கப்படாத போதும், அவர்களே விரும்பி வந்து ஜடேல் எனப்படும் ஐந்து வருடத்திற்குரிய கருத்தடையை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். கர்ப்பம் தரித்த பெண் ஒருவருக்கு ஜடேல் என்னும் கருத்தடைச் சாதனம் செலுத்தப்பட்டமையால் மலையாள்புரத்தில் பெண் ஒருவர் மரணம் அடைந்தமை தொடர்பில் அவர் குறிப்பிட்டபோது யூரினில் கர்ப்பம் அறியும் கருவி இல்லாததால் (பிறக்னன்சி) அந்த தவறு நடந்ததாக கூறியுள்ளார்.
இவ்வாறு சுகாதார அமைச்சர் அளித்துள்ள பதில்கள் தொடர்பாக பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவரும் அரசுக்கு உடந்தையாக கட்டாய கருத்தடையை ஊக்குவிக்கின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வேரவில் கிராமத்தில் குடும்ப நல சிகிச்சைக்காக சென்றவர்களை ஒன்று திரட்டி வாகனம் ஒன்றில் 20 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஜடேல் எனப்படும் கருத்தடை சாதனத்தை செலுத்தியுள்ளனர். அந்த நேரத்தில் கடமையில் இருந்த உத்தியோகத்தர்களினதும் வைத்தியரினதும் சேவை மனப்பான்மை மிகப் பெரியது. அர்பணிப்புடன் ஏற்றிச் சென்று கருத்தடை செய்துள்ளார்கள். இன்று எத்தனையோ பேர் இருக்கின்ற மருந்தையே எடுத்து கொடுக்க பஞ்சிப்படுகிற காலத்தில 20 கிலோமீற்றர் தூரத்திற்கு அழைத்துச் சென்று கருத்தடை செய்தமை அவர்கள் தமது கடமையில் எவ்வளவு அர்பணிப்புடன் இருந்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது. யாருக்காக இந்த அர்பணிப்பை செய்தார்கள்? நோயாளி ஒருவர் அந்த கிராமத்தில் இருந்தால் இதே அர்பணிப்பு இவர்களிடம் இருக்குமா?
இது ஒரு புறம் இருக்க, கர்ப்பம் அறியும் கருவி வெறும் 35 ரூபாய் ஆகும். அதை வாங்கி ரெஸ்ற் பண்ணாமல் கர்ப்பம் தரித்தவர்களுக்கெல்லாம் கருத்தடை செய்திருக்கிறார்கள். கேட்டால் சுகாதார அமைச்சிடம் 35 ரூபாய் பெறுமதியான யூரினில் இருந்து கர்ப்பம் அறியும் கருவி இல்லையாம். ஆனால் ஆயிரக்கனக்கான ரூபாய்கள் பெறுமதியான ஜடேல் எனப்படும் கருத்தடை செலுத்தி தாராளமாக இருக்கிறதாம். இதிலிருந்து அவர்கள் கருத்தடையில் எவ்வளவு உறுதியாக இருக்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இது தவிர மருதங்கேணி கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் கணவர் கடந்த மூன்று வருடங்களாக வெளிநாட்டில் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஐந்து வருடத்திற்கான கருத்தடை ஜடேல் மூலம் செய்யப்பட்டுள்ளது. ஏன் அந்த பெண்ணுக்கு கருத்தடை? அந்த பெண் தவறாக போக அல்லது விபச்சாரம் செய்ய ஊக்குவிக்கவா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆக மொத்தத்தில் தமிழ் பெண்களுக்கு கருத்தடை திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளது. அது வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கும் தெரியும். அவரும் அதை மறுத்து தமிழீன அழிப்புக்கு தாயாராகிவிட்டார் போலும்.
0 comments :
Post a Comment