கொஸ்கொட பிரதேசத்திலிருந்து காணாமல் போன வெள்ளை நிற கடலாமையை தேடுவதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.ஊடகவியலாளர் மாநாட்டில் வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்சா கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார். இந்த வெள்ளை கடலாமை மாலைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு தினங்களுக்கு முன்னர் கொஸ்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள கடலாமை பாதுகாப்பு மத்திய நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மிகவும் அரிதான வெள்ளை நிற கடலாமை திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. ரோஸி என்ற பெயருடைய குறித்த வெள்ளைக் கடலாமை 9.5 கிலோ கிராம் நிறை எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment