Thursday, December 19, 2013

வடக்கின் ஆளுநரை பதவிநீக்கம் செய்யக் கோருவது தமிழீழத்தைக் கட்டியெழுப்பவே!

பிரிவினைவாத புதிய ஈழத்தை உருவாக்குவதற்கான திட்டத்தின் முழு நிபந்தனையாகவிருப்பது வடக்கின் ஆளு நரை பதவி நீக்கம் செய்வதாகும் என தேசிய ஒருமைப் பாட்டு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்து ள்ள அவ்வமைப்பானது ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது

வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஷ்வரன், கடந்த காலம் முழுதும் மிகப் பரவலான முறையில் கேட்டுக்கொண்டது என்னவெனில், வடக்கின் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிரி பதவி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சிவில் அலுவலர் ஒருவரை அவ்விடத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என்பது. அதற்கேற்ப மிகவும் தெளிவாக விளங்குவது யாதெனின், முதலமைச்சரின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு பாரிய இடைஞ்சலாக இருந்தவர் ஆளுநர் என்பதே.

மேலும், அதிஉன்னத கர்தினல் மல்கன் ரஞ்சித் மற்றும் புலி ஆதரவாளரான ஆயர் ராயப்பு ஜோசப் உள்ளிட்ட அருட் பேராயர்கள் சம்மேளமும் வடக்கிலிருந்து ஆளுநரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது. அதேபோல், அந்தக் கருத்துடன் கைகோத்தாற்போல ஐரோப்பியப் பாராளுமன்றமும் அந்த வேண்டுகோளை பிரேரணையாக முன்வைத்து அதனை வெளியிட்டுமுள்ளது. மேற்படி விடயங்களிலிருந்து நன்கு தெளிவாவது என்னவென்றால், உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களில் முதலில் இருப்பது வட மாகாண முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதாகும். இன்று அவரை பதவி நீக்கம் செய்வதானது பிரிவினைவாத புதிய ஈழத் திட்டத்தின் முக்கிய நிபந்தனையாக மாறியுள்ளது.

தற்போதைய ஆளுநர் ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோத்தர் என்றவுடனேயே அவர் அந்தப் பதவிக்குப் பொருத்தமற்றவர் அல்ல என்பதை எந்தவொரு குடிமகனும் ஏற்றுக்கொள்வர் என்பதே உண்மை. சட்டவிரோத பயங்கரவாத இராணுவத்தில் பணிபுரிந்த கெரில்லாப் படைகளுக்கு வட மாகாண சபையில் பதவிகளைப் பெற்றுக் கொள்ளமுடியுமாயின், நாட்டின் சட்டரீதியான இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரியொருவருக்கு ஆளுநர் பதவி வகிக்க முடியாது என்பது ஏன் என்று தமிழ் மக்கள்கூட வினா தொடுக்கின்றனர்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே,

மாகாண ஆளுநர் ஒருவரை பதவிநீக்கம் செய்வதற்கு ஏற்புடையவை யாப்பில் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. யாப்பிற்கு எதிராக உங்களுக்கு வேண்டுகோள்கள் விடுக்க எந்தவொரு உள்நாட்டு வெளிநாட்டு சக்திக்கும் உரிமை இல்லை. அதனால் எந்தவொரு சக்தியைப் பற்றியும் நீங்கள் கவனத்திற் கொள்ள தேவையில்லை என நாங்கள் கருதுகிறோம். ஆயினும் அந்த வேண்டுகோள்களின் குரல் ஜெனீவா மாநாடு ஆரம்பமாகவுள்ள நேரம் பார்த்து மெல்ல மெல்ல மேலெழுவதிலிருந்து அவற்றில் சூழ்ச்சிகள் இருப்பதாகத் தெளிவாகின்றது. ஜெனீவா மாநாட்டுக்கு முன்னர் அரசாங்கம் சர்வதேசக் குரல்களுக்கு செவி சாய்ப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சமாதானத்துடன் ஐக்கியத்துடனும் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதை சுட்டிக் காட்டுவதற்காக பொருத்தமான பலி பூசை வடக்கின் ஆளுநரை அவரது பதவியிலிருந்து நீக்குவதே என பல தரப்பினரும் கூறுகின்றனர்.

அண்மைக் கால பிரிவினைவாத்த்திற்கு பக்கச்சார்புடைய முன்னாள் சிங்கள அரச அதிபர் ஒருவரை இவ்விடயத்துடன் தொடர்புறுத்துவதற்காக சிலர் முயன்றுவருவதும் இந்நிலைப்பாட்டுடனேயே என நாங்கள் கருதுகின்றோம். வட மாகாணத்தின் பாதுகாப்பு தொடர்பான அறிவு நிரம்பப் பெற்றவரும், அப்பிரதேசத்தின் சிவில் நிருவாகம் தொடர்பில் திறமைகளை வெளிக்காட்டியுள்ள ஆளுநரை விடவும், சிறப்புத் தகுதியுடைய ஒருவர் இருப்பார் என இந்நாட்டு பொதுமக்களில் எவரும் நினைக்கமாட்டார்கள். அதனால் எவ்வாறான சக்திகள் எவ்வாறானவற்றை முன்வைத்தபோதும், அவரின் சேவையை மேலும் நீடித்து, அவரது சேவையை வடக்கு மக்கள் தொடர்ந்து பெற்றுக் கொள்ள ஆவன செய்யுமாறு மிகவும் கருணையோடு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பிரிவினைவாத புதிய ஈழத்திட்டத்தை முன்னே கொண்டு செல்லுதல், வடக்கின் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்தல் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். அதனால் இந்தப் பதவியுடன் தொடர்புடைய பிரச்சினையை நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பாக நினைக்குமாறு நாங்கள் பெருவிருப்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழில் – கலைமகன் பைரூஸ்

1 comment:

  1. Due to TNA, Northen province governer are: late militry staff.

    So, he cant be a governer!

    What i say, that all TNA politiciens are LTTE TERRORIST past members, where Sampanthar,Suresh Premchandran, Sumanthiran, Mavai Senathirajah, Sritharan, Selvam Adaikkalanathan, Arianenthiran, Sivaji lingam, Ananthi Elilan and ETC has been involved with terror LTTE!

    So, How those people are in PARLIMENT?????????????????

    Becouse of Tamils IN TAMIL EARIA!!! Thay are still helping those politiciens!!!!! NOT DIASPORAS!!!!!!!!!! NORTHEN PROVINCE TAMILS HELPS ---- TERRORIST!!

    Therfor those all TNA members are against to Sri Lankan government!

    Thay all will get all facilitys from dummi sril lankan government, but all thay will work for LTTE terrorist, UNP Ranil and MANO Ganeshan!!


    Superbbs!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    PORUKKIYAL!!!!!

    VADAKKU TAMILANUM!!!!!!!!!!

    ReplyDelete