Saturday, December 28, 2013

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா!


அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா தனது பதவியை இராஜினாமா செய்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உப தலைவருமான பொன்.செல்வராசா ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பில் தவிசாளர் செல்லையா இராசையா அனுப்பியுள்ள கடிதத்தில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராகிய நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிகபடியான வாக்குகளைப்பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டேன். 

இந்த நிலையில் பிரதேசசபையில் உள்ள ஏனைய மூன்று உறுப்பினர்களும், சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தரமால் தொடர்ந்து குழப்ப நிலைகளை ஏற்படுத்திவருகின்றனர் எனவே இது தொடர்பில் கடந்த காலத்தில் பல தடவைகள் எமது கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டுசென்ற போதிலும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே தொடர்ந்து செயற்பட முடியாத நிலையில் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன். எனினும் கட்சியோ மக்களோ நான் மீண்டும் தவிசாளராக கடமையாற்றுமாறு தீர்மானித்தால் கடமையாற்றவும் தயாராகவுள்ளேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com