காணாமல் போன சிறைச்சாலைகள் தலைமையக பொது சுகாதார பரிசோதகர்!!
சிறைச்சாலைகள் தலைமையகத்தில் பணிபுரிந்த பொது சுகாதார பரிசோதகர் கடந்த இரண்டு வார காலமாக காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.பணிக்கு வராமை தொடர்பில் குறித்த அதிகாரி சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு இது வரை அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத னால் சிறைச்சாலைகள் தலைமையகத்தில் அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பொது சுகாதார பரிசோதகர் தொடர்பில் விசாரணை நடத்தி உடன் அறிக்கை சமர்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சந்திரரத்ன பல்லேகம அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இது குறித்து சுகாதார சேவை பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
0 comments :
Post a Comment