Saturday, December 14, 2013

சிறிதரன் உடனடியாக தற்கொலை செய்ய வேண்டும்! இவர்களின் ஆத்ம சாந்திக்காக நான் பிரார்த்திப்பேன்! பியசேன

இராமாயணத்திற்கு ஒரு கூனி, மகாபாரதத்திற்கு ஒரு சகுணி அதே போன்று தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம். அடுத்தவர் பாராளு மன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றாராம் இவர் கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும். அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். நான் இவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பேன் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற பியசேன தெரிவித்தார்.

இவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப்படுத்த வேண்டும். ஆகவே அதனைச் செய்துதான் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப் படுத்த முடியும் எம்.பியான பியசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய பியசேன எம்.பி மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்து அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும். இராமாயணத்திற்கு ஒரு கூனி, மகாபாரதத்திற்கு ஒரு சகுணி அதே போன்று தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகில் கொடிகட்டிப் பிறந்த இனம் தமிழினம். ஆனால் இந்த தமிழ் தேசிய கூட்டமைப் பினரால் தமிழினம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றன.

இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு சென்றும் நடிக்கிறது இங்கேயும் நடிக்கின்றது. கச்சதீவு என்பது பாம்பு கழற்றிய செட்டை போன்றது. பாம்பு தான் கழற்றிய செட்டையை ஒரு போதும் திரும்ப போட்டுக் கொள்ளாது. அதே போன்று கச்சத்தீவை ஒரு போதும் இந்தியா திரும்பபெற முடியாது.

எமது நாட்டை இராவணன் என்ற மன்னன் ஆண்டான். தற்போது மகிந்த என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி செய்கின்றார். இதை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பொறுக்க முடியவில்லை. இதனால் தான் சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர். எனவே உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com