கிட்னியை தானம் கொடுத்ததால் விடுதலை அடைந்த ஆயுள்தண்டனை பெண் கைதிகள் !!!
தெற்கு அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி என்ற நகரத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த இரண்டு சகோ தரிகளில் ஒருவர் மற்றவருக்கு தனது கிட்னியை தானமாக கொடுத்ததால் அவர்களுடைய மனிதாபமானத்தை அறிந்து அரசு அவர்களை விடுதலை செய்துள்ளது.கடந்த 1994ஆம் ஆண்டு ஜாமி மற்றும் க்லடிஸ் ஸ்கொட் ஆகிய இரண்டு சகோ தரிகள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு நபர்களிடம் வழிப்பறி செய்து $11 பணத்தை திருடியதாகவும், குறித்த இருவரும் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்காகவும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்டது.
கடந்த 19 வருடங்களாக சிறையில் இருந்து வரும் அவர்களில் க்லடிஸ் ஸ்கொட் என்பவர் தனது சகோதரி ஜாமி சிறுநீரக நோயால தாக்கப்பட்டு தினமும் டயாலிசிஸ் என்ற சிகிச்சை செய்து கொண்டிருந்ததால், அவருக்கு சிறுநீரக தானம் கொடுக்க முன்வந்தார். பின்னர் இருவரும் பரோலில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஜாமி நலமாக இருக்கின்றார்.
இவர்களது மனிதாபமானத்தை பார்த்த ஜெயிலர், கவர்னர், இனிமேல் இவர்களால் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று தான் கருதுவதாகவும், எனவே இவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்கிறேன் என்றும் கடிதம் எழுதி யுள்ளார். கடிதம் கிடைத்தவுடன் மிசிசிப்பி கவர்னர் இருவரையும் தனது அதிகா ரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தார்.
இந்த விடுதலை உண்மையிலேயே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என சகோதரிகள் பெருமையாக செய்தியாளர்களிடம் கூறினர். இந்த சம்பவம் மிசிச்சிப்பி முழுவதும் பெரும் பரபரப்புடன் பொதுமக்களால் பேசப்பட்டு வருகிறது.
2 comments :
11 டொலரை திருடியதட்கு 19 வருடங்கள் தண்டனையா ? அமெரிகாவில் எப்படி கருப்பர்கள் அடக்க படுகிறார்கள் என்பதுக்கு இது உதாரணம்.
தயவு செய்து, எவரும் தப்பாக்க சிந்திக்க வேண்டாம். அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளில் சட்டதிக்கு முன் எவரும் சமன். அமெரிக்க ஜனாதிபதி குற்றம் செய்தாலும் சரி, சாதாரண மனிதன் குற்றம் செய்தலும் சரி அவர்கள் சட்டத்தின் முன் சமமானவர்களே. அங்கு நீதி, நியாயம் பாகுபாடின்றி, பாரபட்சமின்றி கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால், இலங்கை, இந்தியாவை பொறுத்தளவில் பசிக்கு வாழைப்பழம் திருடியவன், போதைவஸ்து உபயோகித்தவன் வருட கணக்கில் சிறையில்.
அதேநேரம் மக்களின் வரிபணத்தில் வாழ்ந்துகொண்டு, மக்களின் அன்றாட வாழ்கையை சீரழித்து, மக்களை பட்டினி போட்டு, கள்ள வழிகளிகள் பணம் தேடுகிற அரசியல் ஆசாமிகள், மற்றும் கொலைகள், கொள்ளைகள் செய்த முழு கிரிமினல்கள் எல்லாம் பாராளுமன்றத்தில் வெள்ளை உடுப்புடன் நாட்டை ஆளுகின்றனர்.
நாம் இதை முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும்.
Post a Comment