Sunday, December 8, 2013

வவுனியா பூந்தோட்ட அதிபரின் தொடரும் அடாவடி: நடுவீதியில் பழைய மாணவர்கள்

வவுனியா பூந்தோட்ட மகாவித்தியாலய அதிபர் எஸ்.தனபாலசிங்கம் அவர்களின் அடாவடியால் பழைய மாவர்கள் வீதியில் காவல் நின்றனர்.

இன்றைய தினம் (08) வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர்களுக்கு பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய அதிபர் பாடசாலையை பூட்டிவிட்டு தனது தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளார்.

இதனால் கூட்டத்திற்காக காலை 9.30 மணிளயவில் பாடசாலை முன்பாக குவிந்த மாணவர்கள் பிரதான வீதியில் கூட நின்றனர். சுமார் ஓன்றரை மணித்தியாலம் வரை அதிபருக்காக காவல் நின்ற பழைய மாணவர்கள் வீதியில் சிறிய கொட்டமைக ஒன்றினை அமைத்து தமது கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

பாடசாலை அதிபர் தனபாலசிங்கம் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையில் உயர் பதவி வகிக்கிறார். இதனால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா வை மிரட்டி வைத்துள்ளார். இதன் காரணமாக தான நினைத்ததையே செய்து வருகின்றார்.

பாடசாலை மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணங்களும் அறவிடக் கூடாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ள போதும், அதனையும் மீறி இவ் அதிபர் பாடசாலை மாணவர்களிடம் பாடசாலைக்கு வர்ணம் பூசுதல், மரம் நடுதல், அலங்கரித்தல் என பல தேவைகளுக்கு பணம் பறித்து வருகிறார். இதனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள எமது பகுதி பல மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் பழைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் முன்பு அதிபராக பதவி வகித்த கோமரசங்குளம் அ.த.க பாடசாலையில் பல லட்சம் ரூபாய் தற்போதும் கடன் இருப்பதாகவும் இதனை அப் பாடசாலை மாணவர்களின் பெற்றோரே செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், எமது பாடசாலையையும் அவ்வாறே மாற்ற முனைகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இவர் கச்சேரியில் இருந்து மாணவர்களுக்கு வழங்குவதற்காக சென்ற பேரிச்சம் பழம் நிரம்பிய லொறியை பூட்டி தடுத்து வைத்திருந்து வலயம் போய் மீட்டமை குறிப்பிடத்தக்கது. அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமையே இன்றும் அராஜகம் தொடர காரணம் என்கின்றனர் பழைய மாணவர்கள். இது தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா கவனம் செலுத்த வேண்டும் எனவும் பழைய மாணவர்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

2 comments:

  1. As a head teacher his behavioural difficulties to be watched by the high authorities of the department of Education.He can be a disaster to the students behaviour and studies.He may be a pet of some political VIPs.During the past era
    some heads and teachers had inevitably brutal behaviourism,Now everything changed.Everyone knows what's human psychology.This person defnitely needs psychological treatments.

    ReplyDelete
  2. இவர்கள் திருந்த இடம் இல்லை.
    எனவே ஒரு சில புலிகளின் தண்டனைகளை நினைவுகூற வேண்டும்.
    அதாவது லைட் போஸ்ட் இல் கட்டிவைத்து அடி, உதை மற்றும் பாதுகாப்புஅற்ற முன்னரங்குகளில் தண்ணிர், உணவு இன்றி பங்கர் வெட்டுதல் போன்ற தண்டனைகள் இவர்கள் போன்றவர்களுக்கு கட்டாயம் தேவை.
    மக்களே ஒன்று கூடுங்கள், கட்டிவைத்து நல்ல சாப்பாடு கொடுங்கள். பயப்படவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு சகலரினதும் ஆதரவும், மதிப்பும் கிடைக்கும்.

    ReplyDelete