ரஜினியை பார்த்து வியப்படைந்தாராம் சச்சின் டெண்டுல்கர்!
ரஜினி காந்த் அவர்களின் பணிவு மற்றும் தன்னடக்கத்தை பார்த்து வியந்தேன் எனவும், அவரை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் எனவும், அவரின் நற்பண்புகளை உண்மையிலே பாராட்டுகிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் மிக சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் கிரிக்கெட் ரசிகர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பல் வேறு கிரிக்கெட் போட்டிகளை குறித்து விவாதித்தோம். குறிப்பாக இந்தியா பாகிஸ் தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் குறித்து பேசினோம் என தெரிவித் துள்ளார்.
மேலும் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்றதை என்னால் நம்ப முடிய வில்லை. அதே நேரத்தில் இந்தியாவுக்காக மீண்டும் நான் விளையாட மாட்டேன். ஓய்வு என்னை பாதிக்கவில்லை. தற்போது குடும்பத்தினருடன் பல மணி நேரம் பொழுதை கழிக்கிறேன். எனது மகன் அர்ஜூன் மற்றும் அவனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment