Friday, December 6, 2013

புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளின் தகவல்களை வெளியிடத்தயாராகும் அரசாங்கம்!

இலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடனும் ஆதாரங்களுடனும் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், இலத்திரனியல் உதிரிபாகங்களின் தயாரிப்பு இலக்கங்கள் மற்றும் நாடுகளின் அடையாளங்களையும் வெளியிட தயாராகிறது.

இதில் அமெரிக்க அரசு வைத்துள்ள எம்.16 தாக்குதல் துப்பாக்கி, கடற்புலிகளின் படகுகளில் பயன்படுத்தப்பட்ட ரேதியோன் ரேடார் கட்டமைப்பு, பிரித்தானிய தயாரிப்பான கடல் ஸ்கூட்டர் உட்பட பல பொருட்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

இவற்றில் எம்.16 ரக தாக்குதல் துப்பாக்கி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது என பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிப்பதுடன் புலிகளின் இரணைமடு விமான ஓடுத்தளத்திற்கு தேவையான மின் கலன்கள், மின் விளக்குகள் என்பவையும் பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தயாரிப்புக்கள் என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது பங்களாதேஷ் நாட்டின் விவசாய இரசாயன நிறுவனத்தின் ஊடாக 3 ஸ்லின் ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக செக் குடியரசு இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும் இந்த உண்மைகள் அனைத்தையும் வெளியிட்டு மேற்குலக நாடுகளின் முகமூடியை கழற்ற போவதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Come out with the truth let the outer world learn who rocked the cradle and pinched the child.

    ReplyDelete
  2. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவும் தான் புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் , அப்போ இலங்கை அரசும் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக மேற்கு நாடுகள் திருப்பி கூறும், தன் முதுகில் ஊத்தையை வைத்துக் கொண்டு பிறர் முதுகை சொறியக் கூடாது , முதலில் உள்நாட்டில் இருந்து கொண்டும், அரசோடு இருந்து கொண்டும் புலிகளோடு உறவாடும் நபர்களை " களை" பிடுங்கி விட்டு மற்றவரை குறை சொல்லவும்.

    ReplyDelete
  3. Double standard policies of the big countries is a great disaster to the developing small countries

    ReplyDelete