விநோத உருவில் பலூன்கள்....... (படங்கள்)
அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விநோத உருவங்களில் பாரிய பலூன்கள் பறக்கவிடப்பட்ட காட்சி யானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள் ளது.அமெரிக்காவில் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் வருடாந்தம் கொண்டாடப்படும் நன்றி தெரி விப்பு நிகழ்விலே இத்தகைய பலூன்கள் பறக்கவிடப் பட்டுள்ளன.87 ஆவது தடவையாக கொண்டாடப்படும் இந் நிகழ்வானது இம்முறை நியூயோர்க் நகரில் இம் முறை கொண்டாடப்பட்டது.
இதன்போது,ஸ்பைடர் மேன், மற்றும் ஸ்கூபி உள்ளிட்ட பல உருவங்களை கொண்ட 16 பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வினை நேரடியாக 3.5 மில்லியன் மக்களும் தொலைக்காட்சி மூலமாக 50 மில்லியன் மக்களும் பார்வையிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரத்தை தாக்கிய புயல்காற்றுக் காரணமாக நன்றி தின நிகழ்வில் பலூன்களை முறையாக பறக்கவிடாமல் போகும் என பார்வையாளர்கள் பயந்தபோதும் அவர்களது கரகோஷத்தினால் பலூன்கள் மிகவும் உயரத்தை நோக்கி வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்வினை பார்வையிடுவது ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதுடன் மில்லியன் கணக்கிலான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கூடுவது ஒற்றுமையை வெளிப் படுத்துவதாக பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment