Thursday, December 19, 2013

இலங்கை மருத்துவர் மேற்கொண்ட மற்றொரு அபூர்வமான சத்திரசிகிச்சை வெற்றி!

இலங்கை மருத்துவர் மேற்கொண்ட மற்றொரு அபூர்வமான சத்திரசிகிச்சையொன்று, வெற்றியளித்துள்ளது. பதுளை வைத் தியசாலை மருத்துவ நிபுணர் டொக்டர் அநுருத்த தெவரப் பெரும இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இலங் கையில் முதல் முறையாக புற்றுநோயாளர் ஒருவரின் சிறு நீர்த்தொகுதியிலிருந்த புற்றுநோய் கூறுகள் அகற்றப்பட்டு, சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சத்திரசிகிச்சையை தொடர்ந்து, நோயாளியின் சிறுநீர்த்தொகுதி பழைய நிலைக்கு இயங்க ஆரம்பித்துள்ளதுடன், சிறுகுடலின் ஒரு பாகத்தை அகற்றி, இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதுளை வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் டொக்டர் அருண நந்தசேனவின் உதவியும் இதற்கு கிடைத்ததாக, டொக்டர் தெவரப்பெரும தெரிவித்துள்ளார். சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ஹாலிஎல தொகுதி நோயாளியும், குணமடைந்து வருகின்றார்.

No comments:

Post a Comment