Thursday, December 19, 2013

இராமாயணத்தில் இலங்கை என குறிப்பிடுவது இலங்கையல்லவாம் அது வேறு ஒரு தீவாம்! த.தே.கூ வின் இனவாதம்! - எல்லாவல!

த.தே.கூட்டமைப்பு இலங்கை ஒரு இந்து நாடு என தெரி வித்த கருத்து, இனவாதத்தை தூண்டும் வகையில் வெளி யிடப்பட்ட கருத்து எனவும், மகாபாரதம் இராமாயணம், ஆகியவற்றில் இலங்கையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் மகாபாரதம் இராமாயணம், அவற்றில் இலங்கை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த இலங்கையல்ல எனவும், அது வேறு ஒரு தீவு பற்றியது என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை ஒரு இந்து நாடு என்பதற்கு வரலாற்று ரீதியான சாட்சியங் களும் இல்லை எனவும், அது யூகத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது எனவும், நான் எழுதிய பௌத்த உறுமய நூலில் அதற்கான பதிலை வழங்கியுள்ளேன். இதனை தவறான புரிந்து கொண்டவர்கள் இப்படியான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் எனவும், இராவணன் என்ற மன்னன் இலங்கையில் இருக்கவில்லை எனவும், இராவணன் என்ற மன்னர் இருந்தார் என்பதை உறுதிப்படுத்த எந்த வரலாற்று ரீதியான சான்றுகளும் கிடைக்கவில்லை எனவும், தேரர் தெரிவித் துள்ளார்.

ஆரியர்கள் இந்தியாவில் இருந்து வந்தனர். அவர்கள் வடமேற்கு இந்தியாவில் இருந்து வந்தனரே அன்றி தென்னிந்தியாவில் இருந்து வரவில்லை. இந்தியாவின் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது போல் வேறு பிரதேசங்களில் இருந்தே தமிழர்கள் தென்னிந்தியாவுக்கு வந்துள்ளனர்.

இலங்கைக்கு வந்த ஆரியர்களும், பிராமணர்களும் இலங்கையில் வழிபாடுகளில் ஈடுபட்ட போதும் அவர்கள் வழிப்பட்ட இடங்களை இந்து ஆலயங்கள் என்று கூறமுடியாது. விஜயன், பாண்டுகாபாயன், தேவநம்பியதீசன் ஆகியோர் இந்து மதத்தை பின்பற்றினர் என்பதற்கான சான்றுகள் எங்கும் கிடைத்ததில்லை எனவும், தேரர் தெரிவித்துள்ளார்.

சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், இலங்கையை ஆக்கிரமித்தனர் என்று வரலா ற்றில் கூறப்பட்ட போதும் அந்த சகல சந்தர்ப்பங்களிலும் அவரை தோற்கடித்து இலங்கையை ஐக்கியப்படுத்த இலங்கையில் ஆட்சி செய்த மன்னர்கள் நடவடிக்கை எடுத்தனர். பயங்கரவாத ஆக்கிரமிப்பை அவர்கள் விரட்டியடித்தனர்.எனவும், தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராவணன் தமிழனா அல்லது சிங்களவனா? இலங்கை ஒரு இந்து நாடா அல்லது பௌத்த நாடா? ஏன அமைச்சர் மேர் வினுக்கும் த.தே.கூ மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்மிடையில் இன்று சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

4 comments :

Anonymous ,  December 19, 2013 at 3:34 PM  


MAY BE KATCHAI DEEVU.

Anonymous ,  December 19, 2013 at 5:20 PM  

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி ராஜபக்சவுக்கு இவ்வாறான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. தற்போது நாடு மிகவும் அமையானகவும் இனங்கள் ஒன்றுமையாகவும் வாழ்வதை பொறுக்கமுடியாத சில தீய சக்திகள் அவ்வாறான மத சார்பான கருத்தை முன்வைக்கின்றன. எல்லாம் போக போக சரிவரும் அதொல்லாத் தங்களை பிரபல்லமாக்குவதற்காக வெளியிடும் கருத்துக்கள்.

Anonymous ,  December 19, 2013 at 6:55 PM  


Political and the religious fanatics are the same garbage everywhere.

First of all, these fake monks and the cunning politicians should learn how to be real person as Lord Buddha said.

Abdulla ,  December 19, 2013 at 10:47 PM  

புத்த சமயம் கிட்டதட்ட 2500 வருடங்கள் பழமையானது , ஆனால் ஹிந்து சமயம் அதைவிட பழமையானது , கிட்டதட்ட கி.மு 1500 வருடங்கள் எனவும் , கணக்கிட முடியாத காலம் பழமையானது எனவும் கூறப்படுகின்றது.
எனவே ராமாயண காலத்தில் இங்கு வாழ்த்துள்ளனர் என்பது தெழிவாக தெரிகின்றது, கண்டிப்பாக புத்த சமயம் அல்ல.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com