Thursday, December 26, 2013

ரணிலை விரட்டி மகிந்தவை ஜனாதிபதியாக்க ஜே.வி.பி எடுத்த தீர்மானம் தவறே! - லால்காந்த

மகிந்த அரசாங்கத்தை ஒருமணிநேரத்தில் வீழ்த்த முடியும். அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தை ஜே.வி.பி ஆரம்பித் துள்ளது என அக்கட்சியி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

ரணில் விக்மரசிங்கவை விரட்டி விட்டு மகிந்த ராஜபக்‌சவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என ஜே.வி.பி எடுத்த தீர்மானம் தவறானது. நாட்டை காப்பற்றியவர்களுக்காக மக்கள் வாக்களித்து வருகின்றனர் என்பது உண்மை, மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா ஆகியோருக்கு அதற்காகவே மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்த ஆதரவு ஜே.வி.பிக்கு மட்டுமே கிடைக்கவில்லை. இதனை மொத்தமாக நாங்கள் விற்றோம். ஜே.வி.பி மேற்கொண்ட தீர்மானங்கள் தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1994 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டு கட்சிகளும் தவறானது என்ற கொள்கையுடன் மாற்று அணியை ஏற்படுத்தும் நோக்கில் ஜே.வி.பி செயற்பட தொடங்கியது. தனித்து போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் 16 இடங்களை கைப்பற்றியது. இதனை பயன்படுத்தி முதலாளித்துவ அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி அமைச்சர் பதவிகளை பெற்றது தவறு.

ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டமை தவறானது. ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து அதனை விட மற்றுமொரு சக்தியை கொண்டு வந்து ஜே.வி.பி பாதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment