தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவன்! - வென்னப்புவயில் சம்பவம்!
வென்னப்புவ பிரதேசத்தில் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்த குற்றஞ்சாட்டின் பேரில் குறித்த பெண் ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கி ஒன்றை யும் குறித்த நபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியு ள்ளனர்.
குறித்த நபர் நேற்று அதிகாலை 2 மணியளவில் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்தவரின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாக, 35 வய துடைய குறித்த நபர் தனது மனைவியை கொலை செய்வதற்காக துப்பாக்கியொ ன்றை சொந்தமாக வாங்கியுள்ளார் எனவும், சம்பவத்தில் உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment