சகோதரிகளை கொலைசெய்ய பணம் வழங்கிய சகோதரன்!
இரண்டு சகோதரிகள் மற்றும் மைத்துனரை கொலை செய்வதற்காக ஏழு லட்சம் ரூபா வழங்கிய சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்வதற்காக பணம் பெற்றுக்கொண்ட நபரையும், கொலை செய்வதற்காக பணம் வழங்கிய நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கொலையொப்பந்தக்காரர் சகோதரிகளை கொலை செய்யாமல் இருப்பதற்காக சகோதரிகளிடமும் மூன்று லட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.
பணம் பெற்றுக்கொண்ட கப்பக் கும்பலின் உறுப்பினர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர் என்பதுடன் கொலை செய்யுமாறு உத்தரவிட்ட நபரின் சகோதரி பிரான்ஸில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment