ஜே.வி.பி குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அமைச்சர் பதவியிலிருந்து விலக தயார் : ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!!
இலங்கை சுங்க திணைக்களம் கைப்பற்றிய, எதனோல் மற்றும் மதுசாரம் அடங்கிய இரண்டு கொள்கலன்களுடன் தனக்கு தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியிலிரு ந்து விலக போவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எதனோல் மதுசார தொகையின் பின்னணியில் அமைச்சர் ஜோன்ஸ்டன் மற்றும் அருந்திக்க பெர்ணான்டோ ஆகியோர் இருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப் பினர் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குற்றம் சுமத்தினார்.
ஜே.வி.பி இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள தயார் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன், நிரூபிக்க முடியாது போனால் ஜே.வி.பியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார்.
அதேவேளை இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணா ன்டோவும் நிராகரித்துள்ளார். தனக்கு சுங்க திணைக்களத்தில் உறவினர்கள் எவரு மில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment