கெமுனுவின் பஸ் சங்கம் மட்டுமே எதிராகவுள்ளதாம்!
பஸ்களுக்குரிய சேவைக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
அந்தக் கட்டணம் தாங்க முடியாத உயர்வு எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெளிவுறுத்துகின்றார்.
புதிய பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணையகத்திற்கும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மேல் மாகாண பஸ்களுக்குரிய சேவைக் கட்டணம் சென்ற நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டது.
அதற்கேற்ப, “லோக்“ அநுமதிப் பத்திரம் தொடர்பில் இதுவரை அறவிடப்பட்டுவந்த ரூபா 750 ரூபா ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய வீதி அநுமதிப் பத்திரத்திற்காக இதுவரை அறவிட்ட ரூபா 3 500 ரூபா 5 000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் உரிமையை மீளளிப்பதற்காக அறவிட்ட ரூபா 70 000 ஒரு இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளது.
மேற் சொன்ன பஸ் கட்டணங்கள் தொடர்பில் தங்கள் சங்கத்திற்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை ஆயினும்,
இன்னும் இரண்டு பஸ் சங்கங்கள் இந்த அதிகரிப்புக்களுக்கு உடன்பட்டு கைச்சாத்திட்டுள்ளதாகவும் விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment