Wednesday, December 4, 2013

பண்டிகை காலத்தில் பொருட்கொள்வனவின் போது, காலவதி திகதி தொடர்பில் அதிக கவனம் செலுத்தவும் - நுகர்வோர் அதிகார சபை

நுகர்வுக்கு பொருத்தமற்ற 8000 கிலோகிராம் பயறு மற் றும் உளுந்து ஆகியன கொழும்பு கிராண்பாஸ் பகுதி யிலுள்ள உற்பத்தி நிலையமொன்றில் இருந்து கண்டெடு க்கப்பட்டுள்ளன.இந்த நிலையத்தில் பாசிப்பயிறு உலர்த் தப்பட்டு,பயிற்றம் பருப்பாக வர்த்தக சந்தைக்கு விநி யோகிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப் பிட்டது.அங்கிருந்த 5000 கிலோகிராம் பயறும்,3000 கிலோ கிராம் உளுந்தும் கண்டெடுக்கப்பட்டதுடன்,அதன் உரி மையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரூமி மர்சூக் குறிப்பிட்டார்.

பண்டிகை காலத்தில் பொருட்கொள்வனவில் போது, காலவதி திகதி தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.மோசடிகள் ஏதேனும் இடம்பெற்றால், அது தொடர்பில் 077 10 588 922 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்க முடியும் மென ரூமி மர்சூக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment