Friday, December 27, 2013

"ஆடு நனையுதென்று ஓநாய் அழுதகதை" - தமிழர் வாக்குகளை இலக்கு வைத்து நாடாத்தப்படும் நாடகம்!

இலங்கை தமிழர்சார் அரசியலில் பலவித பரபரப்புகளின் மத்தியில் ஒருவாறாக பொதுநலவாய நாடுகளின் 22வது மாநாடு இலங்கையில் நடந்து முடிந்துள்ளது. இந்தியா, கனடா மற்றும் மொரிசியஸ் போன்ற நாடுகளின் பிரதம ர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாததினால்(ஆனால் இந்த நாடுகள் மாநாட்டினை பகிஸ்கரிக்கவில்லை என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்) அதனை வெற்றியாககொண் டாடும் ஒரு சாராரும் மாநாட்டினை பகிஸ்கரிகக்வேண்டு மென்ற கூச்சல்களின் மத்தியில் மாநாட்டினை நடாத்தி முடித்துவிட்டோம் என்ற திருப்தியில் இலங்கை அரசும் உள்ளனர்.

புலம்பெயர் புலித்தமிழர்களின் பிரதிநிதியாக செயற்படும் பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமருன், இலங்கை அரசு தொடர்பில் விடுத்த அறிக்கை மாநாட்டின் "கிளைமாக்ஸாக" அமைந்திருந்தது. பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமருன் இலங்கையில வைத்து விடுத்த அறிக்கையும், இந்தியாவினதும் கனடாவினதும் பிரதமர்கள் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாமல் விட்டதும் ஒரே நோக்கத்தினைக் கொண்டன என்பது இந்த மூன்று நாடுகளின் உள்நாட்டு அரசியல் நிலைமைகளை அவதானிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.

அதாவது மாநாட்டினை பகிஸ்க்கரிக் கோரிய உள்நாட்டு தீவிரவாத தமிழர் குரல்களுக்கு கொஞ்சம் பால் வார்த்து, தமிழர் வாக்குகளை தம்பக்கம் தக்கவைத்துக் கொள்வதே, இந்த மூன்று நாடுகளினதும் தற்போதைய ஆளுங்கட்சிகளின் நோக்கம்.

குறிப்பாக 2014 ஆண்டில் 543 ஆசனங்களுக்கான இந்தியாவில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 39 தமிழ்நாட்டு ஆசனங்களில் ஒரு பகுதி தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றது. மாநாட்டினை இந்தியா பகிஸ்க்ரிக வேண்டுமெனக் கோரி, தமிழ்நாட்டு வாக்காளர் களை தம்வசப்படுத்தலாமென நினைத்து தமிழக அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கூக்குரலிடுகின்றன. பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் விடுவதின் மூலம் தமிழக வாக்காளர்களையும், தமிழக கட்சிகளையும் ஆசுவாசப்படுத்தலாம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருந்தது.

மேலும் இந்திய மத்திய அரசில் கூட்டாட்சி மூலமே அரசமைக்கலாம் என்பதால் தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டிய நிலையிலும் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆனால் இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சர் இந்திய பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் விட்டது.

கவலையளிப்பதாக உள்ளதென இலங்கையில் வைத்து தெரிவித்த கருத்தானது, மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளாமல் விட்டது தொடர்பான கருத்து வேறுபாடுகள் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவியிருந்ததைக் கோடிட்டுகாட்டியுள்ளது. மேலும் டேவிட்கமருன் கொழும்புவரை சென்றதோடு நின்றுவிடாமல், யாழப்பாணம் போய், இலங்கையில் வைத்தே அதிரடி அறிக்கைவிட்டு "வெல்டி" அடித்ததைப் பார்த்த இந்திய பிரதமருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தாமும் அப்படி ஏதாவது செய்திருந்தால் என்ற எண்ணம் தோன்றியிருப்பதை பொதுநலவாய மாநாடு முடிந்த பின்னரான நிலவரங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

இங்கிலாந்திலும் கனடாவிலும் புலம்பெயர் தமிழர்களின் வாக்குகள் ஆளுங்கட்சி யொன்றினை தெரிவு செய்யும் அளவிற்க்கு தீர்மானகரமாக இல்லாவிடினும் சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல பல கட்சிகளுக்கு வாக்குகள் பிரியும்போது எமது இனத்திற்காக குரல் கொடுத்தவர் என்ற உணர்ச்சி பிரவாகத்தில் புலமபெயர் தமிழர்கள் அளிக்கும் வாக்குகள் ஆளுங்கட்சியாக தெரிவாகக் கூடிய கட்சி யொன்றின் ஆசனங்களை வலுப்படுத்த உதவலாமென்ற புள்ளிவிபர மதிப்பீடுகளின் அடிப்படையிலே இவ்விரு நாடுகளின் அரசியல் இலங்கை தமிழர்பால் திரும்பியுள்ளது.

இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா விற்கும் இடையிலான பிணக்கே, 1983களில் இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதில் முடிந்தது. ஆனால் அப்போது இலங்கையை பிளந்து தமிழர் இராச்சியம் அமைக்கவே இந்தியா ஆயுதப் பயிற்சி தருவதாகவே தமிழர்கள் நம்பினார்கம். இந்தியாவிற்கு இலங்கை தமிழர்களமீது உண்மையான கரிசனை இருகக்வில்லை என்பது தெளிவாக புலப்பட ஒரு சில ஆண்டுகள் தேவைப்பட்டன.

அதேபோல இலங்கை அரசை எச்சரித்து அறிக்கை விடுவது, இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது போன்றன இலங்கை தமிழர் மீதான அக்கறைசார்ந்ததல்ல என்பதை தமிழர்கள் உணர்தல் அவசியம்.

1 comments :

Suthan ,  December 27, 2013 at 11:20 AM  

Exactly correct.

புலிப்பினாமிகளின் பணத்திற்காகவும் தங்களின் அரசியலை கொண்டு நடாத்துவதற்காகவும் சில நாடுகள் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களையும், கபட நாடகங்களையும், இந்த சக்திகள் தழிழர்களின் உண்மையான நலனில் அக்கறை கொள்ளவில்லை என்பதை தழிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு புரிந்துகொண்டு அரசாங்கத்துடன் சுமூகமான முறையில் காய்களை நகர்த்தி தமது பிரச்சினைகளை தீர்த்துகொள்வதே இப்போதைய தேவையாகும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com