வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள், சிங்களவர்கள் பற்றிய எந்தவொரு கணிப்பீடுமில்லை!
வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுமாறு கோரி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் கொழும்பு நகர சபை உறுப்பினருமான முஹம்மது முஸம்மிலின்கையொப்பத்துடன் கூடிய அக்கடிதத்தில்கூறப்பட்டிருப்பதாவது -
பிரிவினைவாத புலிப் பயங்கரவாதிகளினால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு 2013 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு 23 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. 3 தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்திருந்த பயங்கரவாதத்திலிருந்து வடக்கை மீட்டெடுத்து 04 ஆண்டுகளாகின்றன.
வடக்கிலிருந்த பிரிவினைவாத பயங்கரவாதிகளை தோற்கடிக்கச் செய்த கையோடு, செய்ய வேண்டியிருந்த முதலாவது கடமை என்னவென்றால், யுத்தக் காலப் பகுதியில் நிர்க்கதிக்குள்ளான அநாதைகளான அனைத்து மக்களுக்கும் அவர்களுடைய பிரதேசங்களில் குடியமர்வதற்கு ஆவன செய்வதே. அது சிங்கள, தமிழ், முஸ்லிம்களிடையே ஒற்றுமையை, தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான அடிப்படைக் காரணி என்பதை உங்களுக்குப் புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை.
ஆயினும், மிகவும் கவலையாகவேனும் சுட்டிக் காட்ட வேண்டியது என்னவென்றால், அங்கு முதலிடம் கொடுத்து தேசிய தேவையை பூர்த்தி செய்யும்போது, வடக்கிலிருந்து விரட்டப் பட்ட முஸ்லிம், சிங்கள மக்களை அங்கு மீள் குடியேற்ற தாங்கள் தவறிவிட்டீர்கள். அதற்காக ஆவன செய்ய உங்கள் அமைச்சு தவறிவிட்டது. புலிப் பயங்கரவாதிகளால் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம், சிங்களக் குடும்பங்கள் தொடர்பிலான எந்தவொரு கணிப்பீடுகூட உங்கள் அமைச்சில் இல்லை என்பது மிகவும் மோசமான நிலையாகும். ஆயினும், வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் சிங்கள மக்கள் மிக அவசரமாக வடக்கில் மீள் குடியேற்றப்பட வேண்டிய தேவையுள்ளது என்ற விடயத்தை உங்கள் முன் வைக்கின்றோம்.
01. வடக்கிலிருந்து விரட்டப்பட்டு இதுவரை மீள் குடியேற்றப்படாதவர்களைப் பதிவு செய்வதற்காக செயலகமொன்றை ஆரம்பித்தல். அதன் கிளைகளை கொழும்பு, புத்தளம், அநுராதபுரம், கந்தளாய் போன்ற இடங்களில் நிர்மாணித்தல்.
02. அந்தச் செயலகங்களுக்கு தகவல்களை வழங்குமாறு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுவதோடு, அதற்கான முடிவுத் திகதியொன்றையும் அறிவித்தல்.
03. தெரிவுசெய்யப்பட்டவர்களை மீள் குடியேற்றுவதற்காக வரைபடம் ஒன்றை தயார்செய்து. அந்த மக்களுடன் குறித்த தீர்வொன்றுக்கு வருதல்.
04. மீள் குடியேற்றப்படுகின்ற பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், ஜீவனோபாய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல். அவ்வாறு ஜீவனோபாய வசதியை பொதுமக்களுக்கு வழங்கும்வரை, ஆறு மாதங்கள் அம்மக்களுக்கு வாழ்க்கைப் படி வழங்குதல்.
(கேஎப்)
0 comments :
Post a Comment