கோடிக்கணக்கில் பண மோசடி!! தமிழ் இளைஞர்கள் வெள்ளவத்தையில் கைது!!
போலி கடன் அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணத்தை எடுத்த தமிழ் இளைஞர்களை கொண்ட குழுவை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலி ஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் எனவும் இவர்களிடம் இருந்து 560 போலி வங்கி கடன் அட்டைகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித் தனர்.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் தனவந்தர்களின் வங்கி கணக்குகளில் இரகசிய இலக்கங்களை தந்திரமான முறையில் பெற்றுள்ள இந்த சந்தேக நபர்கள் அவற்றை கொண்டு போலியான கடன் அட்டைகளை தயாரித்து இலங்கையில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபா பணத்தை எடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த குழுவைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் முதலில் வெள்ளவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இவர் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் அசாதாரணமான முறையில் பணத்தை எடுத்துள்ளமை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி அவதானித்துள்ளார்.
இதன் பின்னர் முச்சக்கர வண்டியில் சென்ற நபரை பின் தொடர்ந்த பாதுகாப்பு அதிகாரி வெள்ளவத்தை பொலிஸாரின் உதவியுடன் அவரை கைது செய் தார்.அவரிடம் நடத்தப்படட விசாரணைகளில் தெஹிவளை பிரதேசத்தில் வாடகை வீட்டில் குடியிருந்த மூன்று தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 560 போலி கடன் அட்டைகள், மடிக் கணனிகள் உட்பட போலி அட்டை தயாரிக்கும் கருவிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
0 comments :
Post a Comment