ராஜினாமா கடிதத்தை கையளித்தார் - பிரதமர் அலுவலக இணைப்புச் செயலாளர் !!
அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஹெ ரோயின் அடங்கிய கொள்கலனை விடுவிக்க கோரி சுங்க அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய பிரதமர் அலுவலகத்தின் இணைப்புச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்து ள்ளார். பிரதமரின் பொறுப்பின் கீழ் இருக்கும் புத்தசாச அமை ச்சின் இணைப்புச் செயலாளராக பணியாற்றிய கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க என்பவரே தனது ராஜினாமா கடிதத்தை கையளித்து ள்ளார்.
கம்பளை நகர சபையின் உறுப்பினரான தரங்க விட்டச்சி என்பவர் இந்த வர்த்தகர்களை தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் குளியலறை உதிரிபாகங்கள், கிறீஸ் ஒயில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் இரண்டு மாதங்களுக்கு மேலாக சுங்க திணைக்களத்தில் இருப்பதால், தாமத கட்டணங்களை செலுத்தாது அதனை விடுவிக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனடிப்படையிலேயே குறித்த கொள்கலனை கட்டணங்கள் இன்றி விடுவிக் குமாறு கோரி தான் கடிதம் அனுப்பியதாகவும் அதில் போதைப் பொருள் கொண்டு வரப்பட்டிருப்பது தனக்கு தெரியாது எனவும் இணைப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment