டைட்டானிக் பட கதாநாயகிக்கு ஆண் குழந்தை !!
பல விருதுகளை வென்று, வசூலில் சாதனை படைத்த டைட்டானிக் பட கதாநாயகியான கேத்தே, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.1997–ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட ஆங்கிலப்படம் டைட்டானிக். இதில் இங்கிலாந்து நடிகை கேத்தே வின்ஸ் லெட் கதாநாயகியாக நடித்து உலகப் புகழ் பெற்றார்.
டைட்டானிக் படத்தில் நடிக்கும் முன்பே 1991–ம் ஆண்டு தனது 16 வயதில் இங்கிலாந்து டி.வி.நடிகர் ஸ்டீபன் டிரேடர் என்பவரை காதலித்து திருமணம் செய்யாமல் 4½ ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினார். எனினும் இவர்களுக்கு குழந்தை இல்லை.
டைட்டானிக் படம் வெளியான சமயத்தில் ஸ்டீபன் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் நடந்த டைட்டானிக் பட விழாவில் கேத்தே பங்கேற்க முடியவில்லை. அதன்பிறகு 1998–ம் ஆண்டு சினிமா இயக்குனர் ஜிம் திரேபில்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவர் மூலம் கேத்தே ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பிறகு 2001–ல் கணவரை விவாகரத்து செய்தார்.
சினிமா இயக்குனர் காம் மெண்டிஸ் என்பவரை காதலித்து 2003–ல் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மெண்டிசுடனும் கேத்தே இல்லற வாழ்க்கை நீடிக்க வில்லை. 2011–ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இந்த நிலையில் கேத்தேக்கும் மாடல் நடிகர் லூயிஸ் டவ்லர் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. அவருடனும் உறவு நீடிக்கவில்லை. அதன்பிறகு ராக் அன்ரோல் என்பவரை 2012–ம் ஆண்டு நியூயார்க்கில் திருமணம் செய்தார்.
மூன்றாவது கணவர் மூலம் கேத்தேக்கு இங்கிலாந்தின் கவுண்டி நகரில் கடந்த 7–ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. 45 வயதாகும் நடிகை கேத்தே வின்ஸ்லெட் 3 குழந்தைகளுடன் மூன்றாவது கணவருடன் வசித்து வருகிறார்.
0 comments :
Post a Comment