Tuesday, December 24, 2013

அநுராதபுரத்தில் பெண் போலி வைத்தியர் கைது!

அநுராதபுரத்தில் பெண் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார். அநுராதபுரத்தில சட்டவிரோதமான முறையில் வைத்திய சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற குறித்த பெண் போலி வைத்தியர், சுகாதார சேவை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் தலாவ பொலிஸ் நிலையத் திற்கு முன்பாக குறித்த பெண்ணின் சிகிச்சை நிலையம் இயங்கி வந்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் தலாவ பிரதேச வைத்திய அதிகாரியினால் மேற்கொள் ளப்பட்ட விசாரணையின்போது குறித்த பெண் போலி வைத்தியர் என தெரிய வந்துள்ளது.

தலாவ, கிஹருவௌ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், இதற்கு முன் கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக கடமையாற்றியவராவார். சந்தேகநபர் தபுத்தெகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 50,000 ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுளள குறித்த சந்தேகநபரை, ஜனவரி ஒன்பதாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com