Tuesday, December 31, 2013

விண்வெளி எல்லைக்கு சுற்றுலா செல்ல பலூன் தயார்!

விண்வெளியிலிருந்து பூமியை பார்க்க நீங்கள் ஆர்வமாக இருக்கின்றீர்களா? உங்களது ஆர்வத்தை தீர்த்து வைக்க அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைத் தளமாகக்கொண்ட வேர்ல்ட் வீவ் என்டர்பிரைஸஸ் என்ற நிறுவனம் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ள தயாராகியுள்ளது.

இவ்விண்வெளி எல்லை சுற்றுலாத்திட்டமானது புவியின் மேற்பரப்பிலிருந்து 19 மைல் தொலைவுக்கு ஹீலியம் வாயு பலூனில் 8 பேரை அழைத்துச் செல்ல இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளதுடன் விண்வெளியிலிருந்து  புவியின் வடிவத்தினையும் சில நிமிடங்களுக்கு பூச்சிய நிறை நிலையை அனுபவிக்கும் நோக்கில் இச்சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் சுமார் எட்டரை மணிநேர பலூன் பயணத்தில் விண்வெளியிலிருந்து எமது கிரகத்தின் ஆச்சரியங்களை ரசிக்கும் சுற்றுலாவாக அமைவதுடன் இப்பலூன் பயணத்துக்கு 75,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் ஒரு கோடி ரூபா)கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.

இச்சுற்றுலாவுக்கு ஒரு கால்பந்தட்ட மைதானத்தின் அளவினை ஒத்த 40 மில்லியன் கன மீற்றர் ஹீலியம் பலூன் பயன்படுத்தப்படவுள்ளதுடன் இந்த பலூன் நியூ மெக்ஸிகோ பாலைவனத்திலுள்ள சேர் ரிச்சர்ட் ப்ரன்ஸன்ஸ் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து மேலெழும்பவுள்ளது.

மேலும் 'இப்பயணத்தில் 6 பயணிகளும் 2 பணியாளர்களும் பயணிக்கலாம் என்பதுடன் இந்த பயணத்திற்கு எதுவிதமான பயிற்சிகளும் தேவையில்லை என்பதுடன் பாதுகாப்பானதும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com