அம்பலாந்தொட்ட வலேவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர் நடத்தி வரும் சில்லறை விற்பனை கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் குறித்த கடையை சோதனையிட சென்ற பொழுது கடை உரிமையாளரான 57 வயதான பெண் தனது ஆடைகளை முழுமையாக அவிழ்த்து விட்டு முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு கூறி கூச்சலிட்டு பொலிஸாருக்கு தடையேற்படுத்தியுள்ளார்.
இது மட்டும்லாது அவரை தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த பெண்ணின் மகளும் தனது மேலாடையை கழற்றி விட்டு, பொலிஸார் தனக்கும் தனது தாய்க்கு தொந்தரவு கொடுப்பதாக கூச்சலிட்டதை தொடர்ந்து பொலிஸார் சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அம்பலாந்தொட்ட பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சமன்ஜித்தின் ஆலோசனையின் பேரில் சில பெண் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆடைகள் இன்றி இருந்த பெண் மீது துணியை போர்த்தி கைது செய்த பின்னர் கடையை சோதனையிட்ட பொலிஸார் கடையில் இருந்து 500 மில்லி கிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment