Thursday, December 19, 2013

மரணத்தில் சந்தேகம்! அடக்கம் செய்யப்பட்டவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது! - காத்தான்குடியில் சம்பவம்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஒரு கிழமைக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 65 வய துடைய பக்கீர் முகைதீன் மஜீட் என்பவரின் சடலமொன்று இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டடுள்ளது கடந்த வியா ழக்கிழமை தனது வீட்டிலிருந்த நிலையில் மரணமடைந்த குறித்த நபரின் சடலம் அன்றைய தினமே புதிய காத்தான் குடி பதுறியா ஜும் ஆ பள்ளியால் மையவாடியில் அடக் கம் செய்யப்பட்டது.

இதையடுத்து இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மட்டக் களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை தோண்டுமாறு உத்தரவிட்டார். இதனடிப்படையில் இன்று காலை குறித்த நபரின் சடலம் மட்டக் களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் தோண்டப் பட்டது. இதையடுத்து சலடம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு கொண்டு செல்லபைபட்டதுடன் விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com