Thursday, December 5, 2013

நள்ளிரவில் சாரதி இன்றி கொழும்பிலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த ரயில் என்ஜின்!

இன்று அதிகாலை 1.30 அளவில் ரயில் என்ஜின் சாரதியின் உதவியின்றி குறித்த இயந்திரத் தொகுதி மணிக்கு ஐந்து கிலோ மீற்றர் வேகத்தில் தானாகவே கொழும்பு, மாளிகாவத்தையிலிருந்து இரத்மலானை நோக்கிப் பயணம் செய்துள்ளது.

இந்த நேரத்தில் குறித்த ரயில் பாதையில் எந்தவொரு இரயிலும் வாராத காரணத்தினாலும் மக்கள் நடமாடாத காரணத்தினாலும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என்பதுடன் இரத்மலானை ரயில் நிலைய அதிகாரிகள் குறித்த ரயில் இயந்திரத் தொகுதியை நிறுத்தியதுடன் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com