மகிந்தவின் புதல்வர்கள் மூவர் மீதும் எவரும் எந்தவிதமான குற்றங்களையும் சுமத்த முடியாதாம் - குமாரவெல்கம!
நாட்டிலுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் களின் பிள்ளைகள் நடந்து கொள்ளும் விதமும், சில பிரதேச சபை உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் முறை யையும் பார்த்தால் வெட்க கேடாக உள்ள அதேவேளை, ஜனாதிபதி மகிந்தவின புதல்வர்கள் மூவர் மீதும் எவரும் குற்றங்களை சுமத்தமுடியாத விதத்தில் நடந்து கொள் கின்றனர் என போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இளைஞர் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் ஒன் றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தொரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல்வாதி அமைச்சர்களின் பிள்ளைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் ஆனால் ஜனாதிபதி மகிந்தவின புதல்வர்கள் மூவர் மீதும் எவரும் குற்றங்களை சுமத்த முடியாத விதத்தில் நடந்து கொள்வதுடன் இவர்கள் மூவரும் எவருக்கும் எந்தவிதமான தவறுகளையும் செய்யாது வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித் துள்ளார்.
ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் விரும்பினால் எதனையும் செய்ய முடியும் பாதுகாப்பு அதிகாரம என்பன இருக்கின்றன இவ்வாறிருந்தும் தேவையில்லாத எவ் வேலையையும் இவர்கள் செய்வதில்லை என தெரிவித்தார்.
1 comments :
நிச்சயமாக உண்மை என்றுதான் சொல்ல வேண்டும்.
Post a Comment