இந்த நன்நாளில் நத்தார் மணி எழுப்பும் நாத ஓசை சமாதானம், மகிழ்ச்சி, நல்லெண்ணம் என்ற செய்தியை எல்லோருக்கும் கொண்டு வருகிறதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நத்தார் பண்டிகையானது சமூகத்தில் எல்லா வேறுபாடுகளையும் கடந்த அன்பு என்ற செய்தியை ஏந்தி சமாதானத்தின் இளவரசராக இப்பூவுலகிற்கு வந்த இயேசுவின் பிறப்பைக் குறிக்கிறது.
பெத்லஹேமில் தொழுவமொன்றில் நடைபெற்ற இயேசுவின் பிறப்பானது எளிமையான வாழ்க்கையையும் எல்லோருக்கும் அன்பு, இயற்கை உட்பட இந்த உலகை எம்முடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற முக்கிய செய்தியைக் கொண்டுவருகிறது.
நெடுகிலும் இலட்சக்கணக்கான உள்ளங்களை ஆட்கொண்டிருப்பது பிரபஞ்சத்தின் அன்பு, எல்லா மக்கள் மத்தியிலும் சமாதானம் என்பதே கிறிஸ்தவப்போதனையின் ஆரம்பமாகும்.
எனவே இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் கடந்தகால மரபுகளுக்கேற்ப தங்களின் சமய ஸ்தாபகரின் பிறப்பை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கான சுதந்திரமான சூழலைப்பெற்றுள்ளீர்கள் எனவே உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த நத்தார் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment