மத்திய அரசுடன் மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க அரசியலை முன்னெடுக்கவே நாம் விரும்புகின் றோம் என், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரி வித்தார். கொழும்பில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதுடன், நாம் மத்திய அரசுடன் மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க அரசியலை முன்னெடுக்கவே விரும்புகின்றோம். மாகாண சபை என்ற கனவுக் குழந்தை இன்று நனவாகியுள்ளது. இதனை பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டியதே முக்கிய பொறுப்பாகும். இணக்க அரசியல் மூலமே இனப்பிரச் சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.
அந்த வகையில் அதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட வேண்டுமென்பது மட்டுமன்றி உருவாக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தையும் நாம் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனொரு கட்டமாகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்த போதிலும் தவறான புரிந்துணர்வு காரணமாக அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை இருந்த போதிலும் எமது முயற்சிகள் தொடருமென்றும் சுட்டிக்காட்டினார்.
அரசியல் தீர்வை பொறுத்த வரையில் அதன் அவசியம் குறித்து ஜனாதிபதி யுடனான கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா-நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியுமென தமக்கு தெரிவித்ததாகவும் இத்தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்ததாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்திருந்த போது குறித்த விடயம் தொடர்பாக தாம் அவருக்கு எடுத்து விளக்கியதாகவும் அமைச்சர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார். அதுமட்டுமல்லாது நாடாளு மன்றத் தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்வது தொடர்பாக தாம் ஏற்கனவே அதன்தலைவர் இரா.சம்பந்தனுடன் ஏற்கனவே கலந்துரையாடியதையும் இதன் போது நினைவுகூர்ந்தார்.
இவ்விடயத்தில் அரசு நியாயம் மீறி நடக்கும் பட்சத்தில் அதையும் நாம் எதிர்ப் போம் என்றும் அமைச்சர் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார். அந்த வகையில் தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையும் உருவாகிவரும் சூழ்நிலையையும் நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்த அவர், அதற்கேற்ற வகையில் கனிந்து வருகின்ற அருமையான சந்தர்ப்பங்களை தமிழ் கட்சிகள் நன்கு சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், தெரிவுக்குழுவில் விடுபட்டு போனவர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.
20 வருடங்களுக்கு முன் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சிங்கள மக்கள் அவரவர் இடங்களில் சென்று மீள குடியேறி வாழ வேண்டும். தெஹிவளைப் பகுதிகளில் பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்துவதற்கு தடை விதித்தது பற்றியும் ஹிந்து கோவில்கள் தடைவிதிப்பது பற்றியும் எமது கட்சி பொலிசாரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளோமெனவும் தெரிவித்தார்
இம்முறை 2014ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் வட மாகணத்தின் அபிவிருத்திக்காக 5 பில்லியன் அரசினால் ஓதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மேல் மாகாணத்திற்கு 2 பில்லியன் நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு கூட வட மாகாண சபையுடன் இணைந்து சம அந்தஸ்த்தில் அபிவிருத்தியை செய்வதற்கே விரும்புகின்றது. ஆனால் தமிழ்த் தேசிய முண்னணியினர் ஒரு விருண்டாப் பிடியாக செயல் ஆற்றுகின்றனர்.
அண்மையில் பிரித்தாணிய பிரதமர் கெமருன் யாழ் வந்திருந்தார். அவர் வந்ததை விட இந்தியப் பிரதமர் யாழ் வந்திருந்தால் எமது தமிழ் மக்களுக்கு ஒரு பாரியதொரு வழுவாக அமைந்திருக்கும். என அமைச்சர் டக்லஸ் தேவாநாந்த தெரிவித்தார். இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினகளான அலன்டி உதயன், சந்திரகுமார் மற்றும் ஊடகச் செயலாளர் ஸ்டாலின், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராஜாவும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
இரனுமடு நீர்ப்பாசணத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதொரு திட்டமாகும். இத் திட்டத்தில் மாகாணசபை, நீர்ப்பாசணத் திணைக்களம், விவசாயிகள், நீர்விநியோக சபை என பல நிறுவணங்கள் ஆராய்ந்து 26 கோரிக்கைகள் கொண்ட ஒரு திடடமாகுமெனவும் சுட்டிக்காட்டினார்.
(அஷ்ரப் ஏ சமத்)
No comments:
Post a Comment