Wednesday, December 11, 2013

ஈரலை பாதுகாக்க வைத்திருக்க சீராக பேணுவோம்!

எமது உடலில் இன்றியமையாத ஒன்றாக ஈரல் காணப்படுவதுடன் இன்று மனிதர்களில் அதிகமானவருக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக சர்க்கரை நோய் காணப்படுகின்றது மனிதனுக்கு தோன்றும் இத்தகைய நோய்களுக்கு ஈரலின் தொழிற்பாடே பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஈரலின் தொழிற்பாட்டினை சீராக பேணுவதன் மூலம் பல்வேறு வகையான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்லாம் எனவே ஈரலின் தொழிற்பாட்டை சிறப்பாக பேணுவதற்கு சில எளிமையான வழிகளை நித்தம் நித்தம் நாம் கடைபிடிப்பது முக்கியமானது.

கொடி எலுமிச்சை நீரை அருந்துங்கள்

ஒவ்வொரு நாளும் காலையில், எலுமிச்சை சாறு கலந்த நீரை ஒன்றரை கிளாஸ் அருந்த வேண்டும் அவ்வாறு அருந்தம் போது எலுமிச்சை நீரானது ஈரலில் நஞ்சு அகற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.

நெருக்கமான இலை மரக்கறிகளை சாப்பிடுங்கள்

பீற்றூட், கரட், கோவா போன்றவற்றின் இலைகள் ஈரலை புதுப்பிக்கின்றன எனவே ஒருநாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு தடவை இவற்றை உணவில் சேர்த்தகொள்வதுடன் வெங்காயம், உள்ளி என்பவற்றை அதிகம் சாப்பிடுவேம் எனில் இவற்றில் காணப்படும் சல்பரானது ஈரலின் தொழிற்பாட்டை மேம்படுத்தும்.

மஸாஜ் செய்தல்

நிமிர்ந்து படுத்தபடி பித்தப்பை மற்றும் ஈரல் பகுதியை மெதுவாக மஸாஜ் செய்யுங்கள் ஏன் எனில் இவை உங்கள் உடலின் வலது பக்கத்தில் கீழ் நெஞ்செலும்பின் வழியே அமைந்துள்ளன எனவே இவ்வாறு மஸாஜ் செய்யும்போது அவை ஈரலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் அதன் முலம் ஈரலின் தொழில்பாடு சீராக பேணப்படும்.

ஈரலுக்கு அளவுக்கதிகமான வேலை கொடுக்காதீர்கள்

மதுபானம் மற்றும் நோ குறைப்பு மருந்துகள் ஈரலுக்கு கடும் வேலையை கொடுக்கின்றன எனவே சிறிதளவு நோ குறைப்பு மருந்துக்கூட ஈரல் செயலிழப்புக்கு காரணமாகியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது எனவே மருந்துகளை எடுக்கும் போது கவனமாக எடுங்கள்.

ஈரலுக்கு ஆதரவளிக்கும் குறைநிரப்பி உணவுகளை சாப்பிடுவதுடன் நாளென்றுக்கு 45 மில்லிக்கிராம் மஞ்சள் உட்கொள்வதுடன் போதுமான அளவு கணிப்பொருட்களையும் உட்கொண்டால் நல்லது.

மகனீசியம், கல்சியம், பொட்டாசியம், செப்பு, சோடியம், இரும்பு, மங்கனிஸ் என்பன ஈரலில் நஞ்சகற்றல் தொழிற்பாட்டை மேம்படுத்தும் கணிப்பொருட்களாகும் எனவே இவற்றை திரவவடிவில் எடுப்பது மிகச்சிறந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com