புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஜோசப்பு ஆண்டகையின் யோசனைகளை செயற்படுத்த வேண்டியதேவை எமக்கில்லை!
ஜனநாயக நாடு என்ற வகையில் மத அமைப்புக்களோ அல்லது தனி நபரோ தமது யோசனைகளை முன்வைக் கலாம். ஆனால் அவர்களின் யோசனைகளுக்காக நாட்டின் அரசியலமைப்பினை மீறி செயற்பட முடியாது மக்களால் ஆட்சி செய்ய அங்கீகாரம் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டு ள்ளது. நாட்டின் ஆட்சி அரசியல் சட்டத்தின் பிரகாரம் நடை பெறுமே தவிர தனிப்பட்ட நபரின் யோசனைகளுக்கு அமை வாக அல்ல என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும் கத்தோலிக்க ஆயர் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அனைத்து யோசனைகளையும் நாம் பார்த்தோம்.மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர். இவர் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதுக்கு என்னிடம் பல உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று தான் மன்னார் மடு மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தை பாதுகாப்பதற்கு இராணுவத்தினர் முன்வந்த போது பல கிலோ மீற்றர் தொலைவில் இருந்த விடுதலைப் புலிகளிடம் திருச்சொரூபத்தை ஒப்படைத்தமை.
இவ்வாறு புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை இடம்பெற்றுள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை முன்வைத் துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது என தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை விடுதலைப் புலிகள் காலத்திலிருந்து இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்றம் வேண்டும் என கூறி வருகின்றார். எனவே இதுவொன்றும் புதிய விடயம் அல்ல. புலிகளுக்கு சார்பாக செயற்பட்ட மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை இடம்பெற்றுள்ள ஆயர் பேரவையும் அதே யோசனையை தான் முன்வைத்துள்ளது. இதனை நடைமுறைத்த வேண்டிய எந்த கடப்பாடும் எமக்கில்லை என்றார்.
0 comments :
Post a Comment