ஐ.நா சிறப்பு பிரதிநிதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் (படங்கள்) !!
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணை யத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி இன்று செவ் வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள் ளார். இலங்கையில் இடம்பெயர்ந்த மக் களின் ஒட்டுமொத்த நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் ஐந்து நாள் விஜய மொன்றை மேற்கொண்டு இவர் இலங்கை வந்துள்ளார்.இந்த விஜயத்தின் ஒரு பகுதியாகவே இன்று அவர் யாழ்ப்பாண த்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அவர் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
வட மாகாண ஆளுநருடனான சந்திப்பு அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத் திலும் முதலமைச்சருடனான சந்திப்பு முதலமைச்சரின் வாசஸ்தலத்திலும் இடம்பெற்றது. இந்த சந்திப்புக்களின் போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப் பட்டுள்ளன.இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களையும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்க ளையும் ஐ.நா சிறப்பு பிரதிநிதி நேரடியாக சந்திக்கவுள்ளார். தமது பயணத்தின்போது தான் கண்டவை குறித்து முதற்கட்டமாக ஒரு அறிக்கையை அவர் வெளியிட வுள்ளார்.
அத்துடன் இந்த விஜயம் குறித்த முழுமையான அறிக்கை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை கொழும்பில் தங்கவுள்ள அவர், அரச தரப்பினர், சிவில் சமூகத்தினர் மற்றும் இலங்கையிலுள்ள ஐ.நாவின் உயரதிகாரிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
0 comments :
Post a Comment