காலி “ஹெட்ஸ்” அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டு ள்ள “2013 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விழா” நாளை (28) காலை 8 மணி முதல் காலி – ஹிரும்புர ஸுலைமா னியா நவோதய பாடசாலையில் நடைபெறவுள்ளது.
“ஹெட்ஸ்” அமைப்பின் தலைவர் ஏ.ஏ.எம். ஸலாம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான மனுஷா நாணயக்கார கலந்துகொள்வார்.
விசேட அதிதியாக தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், சிறப்பதிதிகளாக அல்ஹாஜ் எம்.ரீ.எம். நவாஸ், பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். இஸ்மத், பொறியியலாளர் அல்ஹாஜ் அர்க்கம், காலி மாநகர சபை உறுப்பினர் பயாஸ் லதீப், போப்பே – பொத்தல பிரதேச சபை உறுப்பினர் ஹுஸைன் கியாஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
2013 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற தமிழ் – சிங்கள மொழிமூல முஸ்லிம் மாணவர்கள், 2012 க.பொ.த. சா.த பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற காலி மாவட்ட மாணவர்கள், 2012 ல் 2 “ஏ” சித்திகளைப் பெற்ற காலி மாவட்ட மாணவர்கள், ஹிரும்புர கல்வி மற்றும் பொதுஅறிவு அபிவிருத்தி அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலை மட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்களில் திறமை காட்டிய மாணவர்கள் ஆகியோரே சாதனையாளர்களாக அந்நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
(கலைமகன் பைரூஸ்)
No comments:
Post a Comment