தலைமைத்துவ சபையென்று ஒன்று யாப்பில் இல்லை…! தலைமைத்துவ சபையில் வாக்குவாதம்!
ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைத்துவ சபையின் சட்ட ரீதித்தன்மை பற்றி அங்கத்தவர்கள் எழுவரிடையேயும் வாக்கு வாதங்கள் முற்றியுள்ளதாக ஐக்கிய பிட்சுகள் முன்னணியின் முன்னாள் அமைப்பாளர் உலபனே சுமங்கள தேரர் குறிப் பிடுகிறார்.
தலைமைத்துவ சபை உருவாக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் சென்றுள்ளபோதும், இதுவரை அச்சபைக்கான யாப்பு வரையப் படாமை பற்றியே
இங்கு பிரச்சினை கிளம்பியுள்ளதாக தேரர் குறிப்பிடுகிறார்.
ஐக்கிய பிட்சுகள் முன்னணியின் 12 பிட்சுக்கள் கைச்சாத்திட்டு வெளியிட்ட பிரேரணைகள் கூடிய காகிதாகிகள், குருணாகலையில் முன்வைக்கப்பட்ட 03 பிரேரணைகள் தொடர்பிலும், கட்சித் தலைவரின் அதிகாரங்கள் தலைமைத்துவ சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களிலிருந்து அவர்கள் பல்வேறு வினாக்களைத் தொடுக்கிறார்கள் எனவும் தேரர் தெளிவுறுத்துகிறார்.
ஐக்கிய பிட்சு முன்னணியின் பிட்சுகளுக்கிடையே எழுந்துள்ள கருத்து வேறு பாடுகள் பற்றி கருத்துத்துரைக்கும்போது அவர், சுமங்கள தேர்ர் குறிப்பிட்டிருப்ப தாவது – 08 பிரேரணைகளுக்கும் பிட்சுகளில் மூவர் மட்டுமே ரணில் விக்கிரசிங்கவுடன் ஒத்துப்போகின்றனர்.
ஏனைய பிட்சுக்கள் உட்பட, நாடளாவிய ஐக்கிய பிட்சுகளின் முன்னணியின் கருத்து என்னவென்றால், தலைமைத்துவ சபையிலுள்ள தலைவருக்கு அதிகாரங்களை வழங்கி, அதனை கட்சி யாப்பினுள் உட்புகுத்தி அதனை சட்டரீதியானதாக மாற்றியமைக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment