வடமாகாணசபை உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான அங்கஜன் அவுஸ்.வில் கைது
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவுஸ்ரேலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட பின்னர் அவுஸ்ரேலியாவிற்கு சென்று அங்கு குடியுரிமை விசா நிறைவு பெற்ற பின்னர் வசித்து வந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாக் குடியுரிமை பெற்ற இவர் கடந்த 3 வருடகாலமாக இலங்கையில் வசித்து வந்தார் தற்போது இவருடைய அவுஸ்ரேலியா விசா நிறைவுபெற்ற நிலையில் அதனைப் புதுப்பிப்பதற்காக அவர் அவுஸ்ரேலியா சென்றார்.
கடந்த 3 மாதகாலமாக விசா இன்றி அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் க.கமலேந்திரன் கொலைக் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இ.அங்கஜன் அவர்களே வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவராக வரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comments :
விடுதலை, சுதந்திரம், போராட்டம் என்று தொடங்கிய பேய் இன்று தமிழரின் கலாச்சாரமாக பீடித்துள்ளது..
எம்மவரின் கீழ்த்தரமான மனநிலை, கொடூர சிந்தனை, கள்ளகுணம், அராஜக செயல்பாடுகளை நினைத்து தமிழ் அன்னை இரத்தக்கண்ணீர் விடுகின்றாள்.
Post a Comment