Saturday, December 7, 2013

பாடசாலைகளில் அரசியல் வாதிகள் அரசியல் பேசுவதை தவிர்க்கவும்-கல்வியமைச்சர் பந்துல!

பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் பேசுவதை அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாது பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் செய்யாது விடும் பட்சத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இனிமேலாவது பாடசாலைகளுக்குச் செல்லும் அரசியல்வாதிகள் ‘அரசியல் என்னும் செருப்புக்களை’ பாடாசாலைக்கு வெளியே கழற்றி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதுடன் கல்வி சார்ந்த விடயங்களைமட்டுமே பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தில் கல்வி, உயர் கல்வி, கல்விச் சேவைகள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் இதனைக்குறிப்பிட்டார்.

கல்வி, உயர் கல்வி, கல்விச் சேவைகள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு விவாதத்தில் அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் பேசுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் தனது உரையின் போது கல்வி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  December 8, 2013 at 10:51 AM  

Politics (Government) can be a subject to every student in the schools colleges and universities,but politicians have no business to enter those premises to give unnecessary brain wash to the poor children.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com