தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வல் வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இரண்டு உறுப்பினர்களும் எதிராக ஜந்து உறுப் பினர்களும் வாக்களித்தாதல் மூன்று மேலதிக வாக்குக ளினால் தோல்வியடைந்துள்ளது.
நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (17.12.2013) செவ்வா ய்க் கிழமை ஆரம்பமானதை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் நகர சபை தலைவர் என்.அனந்தராஜாவினால் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்பின் போது 2: 5 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது.
இதேவேளை, இரண்டு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment